குழந்தைகள் நல பல் மருத்துவம் குறித்த தேசிய கருத்தரங்கு; 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

18 வயது வரை உள்ளவர்ளுக்கும் குழந்தைகள் நல பல் மருத்துவர்கள் கொண்டு சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக தேசிய பல் மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் மஜுந்தார் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த…

18 வயது வரை உள்ளவர்ளுக்கும் குழந்தைகள் நல பல் மருத்துவர்கள் கொண்டு சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலனை நடைபெற்று வருவதாக தேசிய பல் மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் மஜுந்தார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா பல் மருத்துவ கல்லூரியில்
குழந்தைகள் பல்மருத்துவம் குறித்து இந்த ஆண்டிற்கான தேசிய அளவிலான கருத்தரங்கு
நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் தலைவர் டாக்டர் மஜுந்தார் தலைமையேற்றார். இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,மருத்துவ
மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். பல்வேறு பிரிவுகளில் சிறந்த ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல பல்மருத்துவத்திற்கு தேவையான நவீன கால உபகரணங்கள் 40 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவர்கள் அனைவரும் அதனை பார்வையிட்டு சென்றனர்.தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய இந்திய பல்மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் மஜுந்தார், இந்தியாவிலேயே சவிதா பல்மருத்துவ கல்லூரி முதன்மையாக விளங்குவதாக பாராட்டு தெரிவித்தார். இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், இனி வரும் காலங்களில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குழந்தைகள் நல பல் மருத்துவர்களே சிகிச்சை அளிக்கும் வகையில் தேசிய பல் மருத்துவ கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும். விரைவில நல்ல முடிவு கிடைக்கும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.