GOLD RATE | தங்கம் விலை சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10,11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒருகிராம் ரூ.14,650-க்கும், ரூ.400 குறைந்து ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,85,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.