”ஓவ்வொரு மொழியும் ஒவ்வொரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது” – டி.கே.எஸ். இளங்கோவன்

இந்தியா மிகப்பெரிய நாடு, இங்கு பல மொழி பேசகூடியவர்கள் இருக்கிறார்கள், ஓவ்வொரு மொழியும் ஒவ்வொரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது, எனவே அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் தான் அந்த, அந்த கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என திமுக…

இந்தியா மிகப்பெரிய நாடு, இங்கு பல மொழி பேசகூடியவர்கள் இருக்கிறார்கள், ஓவ்வொரு மொழியும் ஒவ்வொரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது, எனவே அந்தந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் தான் அந்த, அந்த கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

மாநிலங்கலவையில் ராகேஷ் சின்ஹா தெரிவித்த கருத்துக்கு, பதிலளித்த திமுக உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், இந்தியா பல்வேறு தத்துவங்களை கொண்ட நாடு எனவும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியர்கள் சுய சிந்தனை கொண்டவர்களாக உள்ளனர் என தெரிவித்தார். மேலும், இந்தியா கலாச்சாரத்தில் உயர்ந்து இருப்பதாக தெரிவித்த அவர்,

திருவள்ளுவர் சொல்லியதுபோல், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா, செய்தொழில் வேற்றுமை யான்” – பிறப்பின் அடிப்படையில் எல்லோரும் சமம். இது தமிழ்நாட்டில் சாத்தியம். ஆனால், மனுதர்மத்தை பின்பற்றும் இடங்களில் சாத்தியமில்லை என அவர் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: GST இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் – விசிக எம்.பி ரவிக்குமார்

தொடர்ந்து பேசிய அவர், தெற்கில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ என்ற நான்கு முக்கிய பேரரசர்கள் ஆட்சி செய்தனர் ஆனால், அவர்கள் சத்திரியர்களில் இருந்து வரவில்லை. சிலர் சொல்கின்றனர் மனுதர்மம் பொதுவானது என்று அதனை எப்படி நாங்கள் ஏற்றுகொள்ள முடியும். என பேசிய அவர், இந்தியா மிகப்பெரிய நாடு, இங்கு பல மொழி பேசகூடயவர்கள் இருக்கிறார்கள், ஓவ்வொரு மொழியும் ஒவ்வொரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.