சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் மே மாதத்தில் மட்டும் அரசுக்கு ரூ.1,40,885 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.97,821 ஆக இருந்தது. தற்போது ஜிஎஸ்டி வருவாய் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ரூ.1.40 லட்சம் கோடியை கடந்தது இது நான்காவது முறையாகும். கடந்த மார்ச் முதல் தொடர்ச்சியாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வருகிறது. இறக்குமதி பொருட்கள் மூலம் கிடைத்த வருவாய் இந்த மாதம் 43 சதவீதமாகியுள்ளது. இந்த மாதத்தில் கிடைத்த வருவாய் மூலம் அரசு நிதி நிலைமை மேலும் வலுவடையும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வரி குறைப்புகளின் தாக்கத்தை இது குறைக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிஜிஎஸ்டி ரூ.25,036 கோடியும், எஸ்ஜிஎஸ்டி ரூ.32,001 கோடியும், ஐஜிஎஸ்டி ரூ.73,345 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு ரூ.52,960 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.55,124 கோடியும் வசூலாகியுள்ளது. சமீபத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்தது. மே 31ம் தேதி வரை உள்ள நிலுவைத் தொகையான ரூ.86,912 கோடியை மத்திய அரசு அளித்தது. மத்திய அரசிடம் ரூ.25,000 கோடிதான் இழப்பீட்டு நிதி இருந்தபோதிலும், ஜிஎஸ்டி நிலுவையை அளித்திருந்தது.
மாநில அரசுகள் திட்டங்கள், மூலதன செலவுகள் ஆகியவற்றை இந்த நிதியாண்டில் செயல்படுத்துவதற்கும் இந்த முடிவை மத்திய அரசு எடுத்தது.