கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்டோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம், உப்புக்காரத் தெருவில் கடந்த 2 வருடங்களாக ஜஸ்வர்யம் என்ற பெயரில் சீட்டு நிறுவனத்தை ராஜேஷ்கண்ணா என்பவர் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மேலாளர் நரேந்திரன். இவர்கள் இருவரும் மாதாந்திர சீட்டு மற்றும் நிரந்தர வைப்பு நிதி பெற்று வந்தனர். நிரந்தர வைப்பு நிதியாக ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 4000 ரூபாய் வட்டி தருவதாக கூறியதால் பலர் இதில் முதலீடு செய்தனர்.
200-க்கும் மேற்பட்டடோர் மாதாந்திர சீட்டும் கட்டியிருந்தனர். எனவே சீட்டுக்கான காலக்கெடு முடிந்த நிலையிலும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என கூறிப்பட்டது. மேலும் இந்நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்ட 40 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் ரூ50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கும்பகோணம் டி.எஸ்.பி. மகேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடலில் ஈடுபட்டனர். திருச்சியிலிருந்த ராஜேஷ்கண்ணா மற்றும் மன்னார்குடியிலிருந்த நரேந்திரன் இருவரையும் கைது செய்த போலீசார் நேற்று சிறையில் அடைத்தனர்.
அனகா காளமேகன்






