கரூரில் நள்ளிரவில் மங்கி தொப்பி, கையில் கிளஸ், மேலாடை இன்றி சுற்றித்
திரியும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் அருகில் உள்ளது ஆதி மாரியம்மன் நகர்.
இங்கு கடந்த 22ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் 3 பேர் தெருக்களில்
வித்தியாசமான முறையில் நடந்து செல்லும் சி.சி.டி.வி கேமரா காட்சிகள், கடந்த 4
நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில்
சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண்கள் 3 பேர் தலையில் மங்கி கேப், கையில் கிளஸ்,
இடுப்பில் வேட்டியை கட்டிக்கொண்டு, தெருக்களை நோட்டமிடுகின்றனர்.
பின்பு, அங்கிருந்த ஒரு வீட்டில் சுற்றுச் சுவரை ஏறி குதிக்க முயற்சி செய்கின்றனர்.
ஆனால், முயற்சி பலனிக்கவில்லை, மற்றொரு வீட்டில் சுற்றுச் சுவரில் ஏறிக் குதித்து
வீட்டின் பக்கவாட்டில் நடந்து செல்லும் மர்ம நபர், ஒருவர் அங்குள்ள 2 கதவுகளையும்
திறக்க முயற்சி செய்கிறார். ஆனால், அவை திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து
தப்பி விடுகிறார். இந்த காட்சிகள் அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி பொறுத்தப்பட்டுள்ள
வீடுகளில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் மகுடேஸ்வரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கு. பாலமுருகன்







