ஒகேனக்கல் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு: வீணாக வெளியேறிய குடிநீர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் வால்வு உடைந்து சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட…

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் வால்வு உடைந்து சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வீணாக வெளியேறியது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயின் வால்வு அமையப் பெற்றுள்ளது. இந்த வால்வில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து தண்ணீர் வீணாக வயல் வெளிகளில் வெளியேறியது.

மேலும், அருகிலிருந்த தென்னை, நெல் வயல்கள் நீரால் நிரம்பின. சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வயல்வெளிகளில் ஆறாக ஓடியதை பொது மக்கள் கவலையுடன் பார்த்து சென்றனர்.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.