டில்லி சிறைக்குச் செல்வதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார், அடைக்கலத்திற்கும் டில்லிக்கும் இடையே பிரச்சனை என்ன என்பதுதான் கைதி – 2 திரைப்படத்தின் கதையாக இருக்கலாம்.
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. விக்ரம் படத்தில் கைதியின் கதையை இணைத்து ரசிகர்களின் எதிர்பார்த்ததிற்கும் மேல் பல அசத்தலான காட்சிகளை அமைத்துத் திரை அரங்குகளை அதிரச்செய்தார் லோகேஷ் கனகராஜ். மேலும், சூர்யா வரும் சில நிமிட காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே விக்ரம் படத்தில் கார்த்தி நடிக்க இருந்த நிலையில் அவர் பொன்னியின் செல்வன் படத்திற்காக வளர்த்த முடியால் அவரால் டில்லி கதாபாத்திரத்தில் தோன்ற முடியவில்லை. எனவேதான் அவரின் குரலை மட்டும் பயன்படுத்தி விக்ரம் படத்தில் டில்லியை இணைத்தனர்.
தற்போது விஜய்யுடன் மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் லோகேஷ்.நடிகர் கார்த்தி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், “விஜய் 67 படம் முடிந்தபின் கைதி- 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார். லோகேஷ் விஜய் 67 படத்தில் “கைதி ” அல்லது “விக்ரம் ” கதையை இணைப்பாரா ? என ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.இந்த நிலையில் கைதி – 2 படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கார்த்தி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கைதி படத்தில் டில்லி (கார்த்தி) சிறைக்குச் செல்வதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார், அடைக்கலத்திற்கும் டில்லிக்கும் இடையேயான கதை என்ன என்பதைப் பற்றியதாக ‘கைதி 2’ இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் மேலாக ‘கைதி – 2 வில் ரோலக்ஸும் (சூர்யா) இணைகிறார். இதன் முலம் அண்ணன் சூர்யாவுடன் முதன் முறையாக தம்பி கார்த்தி இணைந்து நடிக்கவுள்ளார் என் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன.