கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர். சென்னையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம்…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பளித்தனர்.

சென்னையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சியில்
கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை சென்றார்.  கோவை விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை  வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மூன்று நாள் பயணமாக கோவை விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக ஈரோடு செல்கிறார். அங்கு முதலமைச்சர் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் கரூரில் இன்று தங்குகிறார். அதன் பின்னர் கரூரில் நாளை நடக்கும் அரசு விழாவில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதற்கு அடுத்த நாள் திண்டுக்கல் பகுதியில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

தமிழக முதலமைச்சர் கோவை வருவதையை ஒட்டி கோவை விமான நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதலமைச்சர்  வருகையை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு  இருந்தது. இதற்கிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த கோவை தங்கம் சமீபத்தில் உடல் நல குறைவால் உயிரிழந்தார். அவரது இல்லத்திற்கு கோவை வந்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று குடும்ப உறுபினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.