முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு பள்ளி மாணவர்களுடன் துபாய் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி-வினா போட்டியில் சிறப்பாக செயல்பட்ட 68 மாணவர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியுடன் துபாய் சென்றுள்ளனர்.

2021-ம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ-மாணவிகளை மாநில அளவில் தேர்வு செய்தனர். அதன்படி, 68 மாணவ-மாணவிகளை கல்வித்துறை தேர்வு செய்து இருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, 68 மாணவர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டனர். மாணவர்களின் பாதுகாப்புக்காக 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் என மொத்தம் 76 பேர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

வருகிற 13-ந்தேதி வரை துபாயில் இருக்கும் அவர்கள், அங்கு ஷார்ஜாவில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் பங்கு பெற உள்ளனர். இதனிடையே இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டரில், ” முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துகளோடு அரசுப் பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு சார்ஜா பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த வேண்டும்’ – பசுமை தீர்ப்பாயம்

Arivazhagan Chinnasamy

ஆப்கானிஸ்தானுக்கு 3 ஆயிரம் டன் கோதுமை அனுப்பிவைப்பு

Mohan Dass

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

Saravana