சென்னையில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, வயிற்று…

சென்னையில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் அந்த சிறுமியிடம் கேட்டபோது, அதே பகுதியில் வசிக்கும் ராகவா ராஜா என்பவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை வீடியோவாக எடுத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் அந்த கர்ப்பத்தை கலைக்க ராகவா ராஜா மாத்திரை வாங்கிக் கொடுத்ததும், அதையடுத்து சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியின் தந்தை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராகவா ராஜாவை கைது செய்தனர்.

அண்மைச் செய்தி: அதிமுக – பாஜக இடப்பங்கீடு: சுமூகமாக நடைபெற்றதாக மாநில தலைவர் அண்ணாமலை தகவல்

இதுபோன்ற குற்றச்சம்பவங்களை, தடுக்க காவல்துறை உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து புகார் கொடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.