ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி முடிவு!

அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக எண்ணெய்க் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருந்தது…

அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அரியலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக எண்ணெய்க் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருந்தது ஓஎன்ஜிசி நிறுவனம். தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி மறுத்துள்ள நிலையில், நிலங்களை கையப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

காரைக்கால் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதல் நிலங்களை கையகப்படுத்த ஏதுவாக அதிகாரிகளை ஓஎன்ஜிசி தேர்வு செய்ய உள்ளது. ஓய்வுபெற்ற நில அளவையர், ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட எட்டு பேரை தேர்வு செய்ய இருப்பதாக அறிவிப்பாணையை ஓஎன்ஜிசி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.