லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ImScared’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது.
#ImScared is here https://t.co/83V7UIDJTT@actorvijay @7screenstudio @Dir_Lokesh @Jagadishbliss @SonyMusicSouth pic.twitter.com/AS6JpNXTkv
— Anirudh Ravichander (@anirudhofficial) October 27, 2023
ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம், ஓரிரு நாட்களில் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆஃபீசை லியோ கலங்கடித்து வருவதால், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து மீம்ஸ்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘I am Scared’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.








