‘புள்ளிங்கோ’ ஸ்டைலில் வந்த மாணவர்கள்! அதிரடியில் இறங்கிய ஆசிரியர்கள்!

திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரற்ற முறையில் உள்ள சிகை அமைப்புடன்  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடித்திருத்துவர்கள் கொண்டு முடி வெட்டினர். திருவொற்றியூர் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6…

திருவொற்றியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரற்ற முறையில் உள்ள சிகை அமைப்புடன்  மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முடித்திருத்துவர்கள் கொண்டு முடி வெட்டினர்.
திருவொற்றியூர் பகுதியில் ஜெயகோபால் கரோடியா அரசு பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை சுமார் 1350 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில்,  விதவிதமான சிகை அலங்காரங்களுடன் சீரற்ற முறையில் மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்தனர். சிலர் புள்ளிங்கோ ஸ்டைலில் தலைமுடியுடன் பள்ளிக்கு வந்தனர்.
இந்நிலையில், அவர்களை தலைமை ஆசிரியரும் பிற ஆசிரியர்களும் கண்டித்து, முடி திருத்தம் செய்து வரக் கூறினர். அதன்படி பல மாணவர்கள் திருத்தம் செய்த போதும், சில மாணவர்கள் பழையபடியே வந்த நிலையில், அந்த மாணவர்களை அழைத்து, பள்ளியிலேயே முடிதிருத்துவோரை வரவழைத்து ஆசியர்கள் முடிதிருத்தம் செய்ய வைத்தனர்.
மேலும்  சில மாணவர்கள் வருத்தம் தெரிவித்த போது,  ஆசிரியர் சங்க உறுப்பினர்  கே.பி சொக்கலிங்கம் ஆசிரியர்களுடன் சேர்ந்து  மாணவர்களோடு பேசி முடி திருத்துவது நல்லது என கூறி சமாதானம் செய்தார். இவ்வாறாக 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் சுமார் 75 மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது. மேலும், கோயிலுக்காக முடி வைத்துள்ளோம் என்று சொல்ல சில மாணவர்களை வற்புறுத்தாமல் அனுப்பி வைத்தனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.