தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்புவிற்கு இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் குஷ்பு .
குஷ்பு நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். பாஜக நிர்வாகியான குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமானராகவும் உள்ளார். இவர் அண்மையில் காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
https://twitter.com/khushsundar/status/1672211350955892744
பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய நடிகை குஷ்பு, தற்போது இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், ”இடுப்பு எலும்பிற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் முழுமையாக குணமாகும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு வால் எலும்பில் நுண்துளை அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.







