தமிழகத்தில் நீட் தேர்வை திணித்திருப்பது அராஜகம் : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும் மத்திய அரசு…

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை  நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும் மத்திய அரசு நீட் தேர்வை  தமிழகத்தில் திணித்திருப்பது அராஜகம் என்றும், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் என்ற போர்வையில் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்படுவதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். கல்வி என்பது மாநில அரசின் கொள்கை இதில் மத்திய அரசு தலையிடக்கூடாது எனவும் தெரிவித்தார். உலகத்தில் காவிரி டெல்டாவை போல் சமவெளி எங்கும் கிடையாது எனவும் இந்த இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் 200 முதல் 300 கிணறுகளை தோண்டி மீத்தேன், பாறை, எரிவாயு, பெட்ரோல் போன்றவை எடுக்க திட்டமிட்டுள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் முதலில் வெளியேற வேண்டும், இல்லையெனில்  வெளியேற்றப்படும் என்றும் அன்புமணி மேலும் தெரிவித்தார் .கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு, புதிய  மாவட்டமாக அமைக்க வேண்டும் என்பது தான். இதற்காக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் ,விரைவில் கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் என்றும்  தெரிவித்தார். அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 வருகிறது அதற்குள் தமிழக அரசு உரிய அறிவிப்பினை வெளியிடும் என நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் கீழ் போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-
விக்கிரவாண்டி சாலை பல ஆண்டுகளாக போடப்பட்டு வருகிறது. இந்தப் பணியினை விரைந்து முடிக்க  வேண்டும் என்றும்,கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக கொள்ளிடம் ஆற்றின் மூலம் இதுவரை 200 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது எனவே தமிழக அரசு கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.தமிழகத்தைப் பொறுத்தவரை மது, சூது, போதை ,போன்றவை  இளைஞர்களை சீரழித்து வருகிறது. அதனை முற்றிலும் தடை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டார். தஞ்சாவூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையத்தை கும்பகோணத்தில் அமைக்க வேண்டும் . காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தேவையான அளவிற்கு கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனவும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை பாதுகாக்க அதிக அளவில் கிடங்குகள் அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.