முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 13,091 பேருக்கு புதிதாக கொரோனா உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட அதிகம்.

தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர். தொற்றுப் பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,38,00,925- ஆக உயர்ந்துள்ளது. 340- பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,62,189 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,44,01,670 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,38,556 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவு. நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 57,54,817 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 1,10,23,34,225 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

Advertisement:
SHARE

Related posts

நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு

Gayathri Venkatesan

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 11-ம் தேதி தொடக்கம்!

Ezhilarasan

பயிர்க்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு – அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு

Saravana Kumar