முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது: எல்,முருகன்

மத்திய அமைச்சராக பதவியேற்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, அமைச்சரவையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக கட்சி தலைவர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சரவையை மாற்றி அமைக்க வசதியாக, மத்திய அமைச்சர்கள் சிலர் இன்று தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில் 43 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியானது. அதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் இன்று மாலை, பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சராக பதவியேற்பது சந்தோஷமாக உள்ளது என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு விழாவுக்காக டெல்லி பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டபோது, இதனை எல்.முருகன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

சொந்த ஊர் திரும்பும் மீனவர்கள்!

Ezhilarasan

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்- கனிமொழி எம்.பி. விளக்கம்

Gayathri Venkatesan

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!

Gayathri Venkatesan