முக்கியச் செய்திகள்

திருக்குறளும் திராவிட இயக்கங்களும்…

அரசுப் பேருந்துகளில் திருக்குறளை, அதன் விளக்கத்துடன் எழுதும் பணி 10 நாட்களுக்குள் நிறைவடையும் என அமைச்சர் ராஜக்கண்ணப்பன் தெரிவித்துள்ளார். பேருந்துகளில் முதலில் திருக்குறள் எழுத தொடங்கியது எப்படி என்பது குறித்து இந்த கட்டிரையில் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் பேருந்துகள் நாட்டுடமையாகப்பட்ட உடன் பேருந்துகளில் திருக்குறள்களை எழுத அப்போதைய முதலமைச்சர் அண்ணா உத்தரவிட்டிருந்தார். அப்போது சட்டமன்றத்தில் எதிர்கட்சியிலிருந்து ஒருவர் அண்ணாவை சிக்கலில் மாட்டிவிடுவதற்காக “யாகாவாராயினும் நா காக்க னு எழுதியிருக்கே” அது பஸ் நடத்துனருக்கா? டிரைவருக்கா? இல்ல பயணிகளுக்கா? என கேள்வி கேட்டார். இதற்கு எப்படி பதில் தந்தாலும் ஒரு தரப்பினருக்கு கோபம் வருமே என்று மற்றவர்கள் யோசிக்க, “நாக்கு உள்ள எல்லோருக்கும்” என்று சாதுர்யமாக பதில் அளித்தார் அண்ணா. இப்படித்தான் தொடங்கியது, தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதும் நடைமுறை.

திராவிட இயக்கங்களுக்கும் திருக்குறளுக்குமான பந்தம் நீண்டது. திருக்குறள் மாநாடு என்று பெரியார் நடத்திய மாநாடு அந்த கால கட்டத்தில் முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியது. பின் நாளில் ஆட்சிக்கு வந்த திமுகவும் திருக்குறளை கொண்டாடியது. அண்ணாவின் ஆட்சிகாலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, பேருந்துகளில் திருக்குறள் திட்டத்தை முழு வேகத்தில் அமல்படுத்தினார்.

இதனால் மக்கள் மத்தியில் திருக்குறள் ஒரு முக்கிய பேசு பொருளாக மாறியது. பட்டி தொட்டியெல்லாம் திருக்குறளை கொண்டு சேர்க்க உதவியது. அதுவும் சில மணி நேர பயணத்தில் பேருந்தின் எந்த பகுதியில் இருந்து பார்த்தாலும் தெரியும்படி ஓட்டுனர் இருக்கைக்கு பின்புறம் நடத்துனர் இருக்கைக்கு மேல் என தேர்ந்தெடுத்து எழுதியதும் முக்கிய அம்சம். இந்த நடவடிக்கையால் நூற்றுக்கனக்கான ஓவியர்களும் பலன் பெற்றனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் பேருந்துகளில் காணாமல் போன திருக்குறளை மீண்டும் கொண்டு வருகிறது திமுக அரசு. இதற்கான பணிகள் வேகமாக நடைபெறுவதாகவும் விரைவில் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு சிறப்பு ஒளி ஏற்பாடுகள்; வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்க நடவடிக்கை; பேருந்துகளில் மீண்டும் திருக்குறள் என முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் நடவடிக்கைகள், திராவிட இயக்கத்தின் தொடர் நடவடிக்கையே என்றாலும், டிஜிட்டல் யுகத்திலும் அதிகம் தேவைப்படும், தேடப்படும் வள்ளுவத்தை இன்னும் வேகமாக கொண்டு சேர்ப்பது இன்றியமையாத தேவையே

Advertisement:
SHARE

Related posts

மர்மமான முறையில் வாலிபர் மரணம்!

Niruban Chakkaaravarthi

மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Saravana Kumar

மத்திய அரசுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி தலைவர்கள் பேரணி

Ezhilarasan