ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது என்பதை கண்டறிய ஏதேனும் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதா?என்றும், ஆன்லைன் சூதாட்டங்களை சட்டபூர்வமாக மாற்றுவதற்கு மத்திய அரசிடம் ஏதேனும் முடிவு இருக்கிறதா? என்றும் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ஆன்லைன் சூதாட்டங்களில் எவ்வளவு பணம் புழக்கத்தில் இருக்கிறது என்பது தொடர்பாக எந்த ஒரு கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்தவில்லை என்றும் , ஆன்லைன் சூதாட்டங்களை சட்டபூர்வமாக்க மத்திய அரசுக்கு எந்த ஒரு பரிந்துரையும் வரவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை இயக்குனரகம், ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் ஹவாலா பணப்பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வ பதிலில் பங்கஜ் சவுத்ரி குறிப்பிடப்பட்டுள்ளார்.