ஆற்றில் விதிகளை மீறி கட்டப்பட்ட சாயப்பட்டறை; நடவடிக்கை எடுக்காதது ஏன் – நீதிபதிகள் கேள்வி

அமராவதி ஆற்றில் அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சாயப்பட்டறை கட்டுமானத்தை இடிக்க மனு அளித்து 3 வருடமாக்கியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என  நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.  கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் உயர்நீதிமன்ற…

அமராவதி ஆற்றில் அரசின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சாயப்பட்டறை
கட்டுமானத்தை இடிக்க மனு அளித்து 3 வருடமாக்கியும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என  நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். 

கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தனசேகரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் தாக்கல்
செய்த மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “கரூர், அமராவதி ஆற்றை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவில் சாயப்பட்டறை
தொழிற்சாலைகள் கட்டுவதற்கு, இயங்குவதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் திருப்பூரைச் சார்ந்த (ஏசியன் கம்பெனி) தனியார் துணி நிறுவனம்
அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறை அமைத்து அதன் கழிவுகளை அமராவதி ஆற்றில் கலந்து வருகின்றனர்.

இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அரசு உத்தரவிற்க்கு மாறாக
சட்டவிரோதமாக அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு நகரமைப்பு துறை இயக்குனருக்கு மனு அளிக்கப்பட்டது ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.


எனவே, சட்ட விரோதமாக அமராவதி ஆற்றின் அருகே சாயப்பட்டறைக்கு அனுமதி அளித்த
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க் வேண்டும் மேலும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட
கட்டுமானங்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சட்ட விரோதமாக கட்டுமானம் குறித்து நடவடிக்கை எடுக்க கடந்த 2020 ஆண்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது 3 வருடம் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய

காலதாமதம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் தவறும் பட்சத்தில்
தமிழ்நாடு நகரமைப்பு துறை இயக்குனர் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரித்து
வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.