பாலிவுட் நடிகரும் இயக்குனருமான சதீஷ் கெளசிக் தன்னுடைய 67 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் இயக்குநர், நடிகருமான சதீஷ் சந்திர கெளசிக் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் 1987ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான மிஸ்டர் இந்தியா மூலம் நடிகராக அறிமுகமானார். ‘ரூப் கி ராணி சோரன் கா ராஜா’ என்கிற பாலிவுட் படம் இயக்குனராக அறிமுகமானார் சதீஷ் கெளசிக்.
இயக்குனர் பாலா – விக்ரம் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற சேது படத்தை இந்தியில் தேரே நாம் என்கிற பெயரில் ரீமேக் செய்திருந்தார் சதீஷ் கெளசிக். சல்மான் கான் மற்றும் பூமிகா நடிப்பில் வெளியான இப்படம் இந்தியில் வெற்றிவாகை சூடியது. இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்காக இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். இதையடுத்து 13 படங்களை இயக்கியுள்ள சதீஷ் கெளசிக் 90க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் நடித்து அசத்தி இருக்கிறார்.
அண்மைச் செய்தி : சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படம்?… இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
நேற்று மும்பையில் குருகிராமுக்கு காரில் சென்ற சதீஷ் கெளசிக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். சதீஷ் கெளசிக்கின் மரணம் பாலிவுட் பிரபலங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.







