திருவள்ளூர் மாவட்டம் நெய்தவாயல் கிராமத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
நெய்தவாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநர் பாபு. அவரது மனைவி அலமேலு இருவரும் பணிக்காக சென்று இருந்த போது, அவரது வீட்டில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு குடிசை தீப்பற்றி எரிந்தது.
இதில் வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் டிவி, குளிர்சாதனப் பெட்டி, பீரோவில் இருந்த துணிமணிகள் மற்றும் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த 2 லட்சம் ரூபாய் பணம் , பத்திர ஆவணங்கள், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவை தீயில் எரிந்து சாம்பலாகின.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொன்னேரி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
–அனகா காளமேகன்








