இசையமைப்பாளர் இளையராஜாவும், நடிகர் கமல்ஹாசனும் ட்விட்டரில் மாறி மாறி அன்பைப் பரிமாறிக்கொண்ட நிகழ்வு தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்படுகிறது.
வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே! என இசையமைப்பாளர் இளையராஜா ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காணச் சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே -அது வெற்றிப் புன்னகை புரியுதே! என மாற்றிக்கொள்ளலாம்” எனப் பதிவிட்டிருந்தார்,
https://twitter.com/ilaiyaraaja/status/1539254315436720132
அண்மைச் செய்தி: ‘மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை; இந்திய அணி விவரம்’
https://twitter.com/news7tamil/status/1539279567436730368
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன் அந்த ட்விட்டை ரீட்விட் செய்துள்ளார். அதில், “நம் அன்பை எப்போதாவது தான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றுபோல் தொடர விழையும் உங்கள் நான்” கூறியுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/1539277555668135942?t=219QX84QN8L20w3wMfFuBQ&s=08







