தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை தான் தலைவர் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எப்போதும் மரியாதை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பொதுக்குழு செயற்குழு இங்கே நடந்தது போல அனைத்து நிர்வாகிகளும் இங்கு வந்துள்ளனர் என குறிப்பிட்டார். எத்தனை சோதனைகள் வழக்குகள் மனுக்கள் போட்டாலும் சாதகமான சூழல் அமையாது என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுக-வில் தொண்டர்கள் நினைத்தால் தான் தலைவராக முடியும் என தெரிவித்த கோகுல இந்திரா, தற்போது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை தான் தலைவர் என்று தாமாக முன்வந்து தெரிவித்து விட்டார்கள் என கூறினார். ஆனால் கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கான மரியாதை எப்போதும் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுயநலத்தோடு காவல் நிலையத்துக்கு செய்வதெல்லாம் அதிமுக ஏற்கனவே பார்த்து விட்டதாகவும், குறிப்பாக சில மாவட்டச் செயலாளர்கள் இங்கு வரவில்லை என்றும் கூறினார். ஆனால் அவர்களுக்கு பதிலாக மாவட்ட நிர்வாகிகள் இங்கே வந்து ஆதரவு தெரிவித்துவிட்டார்கள் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருக்கும் மாவட்ட செயலாளர்களும் நாளை வந்து விடுவார்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கோகுல இந்திரா தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்