எரிமலை குழம்பில் ‘ஹாட் டாக்’ சமைத்த விஞ்ஞானிகள்!

ஐஸ்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பை உமிழ்ந்து வருகிறது. இந்த நெருப்பு குழம்பில் விஞ்ஞானிகள் சிலர் சுவையான அமெரிக்க உணவான ‘ஹாட் டாக்’ சமைத்த வீடியோ…

ஐஸ்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பை உமிழ்ந்து வருகிறது. இந்த நெருப்பு குழம்பில் விஞ்ஞானிகள் சிலர் சுவையான அமெரிக்க உணவான ‘ஹாட் டாக்’ சமைத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

ஐஸ்லாந்து நாட்டில் கடந்த 900 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாகத் தென்மேற்கு பகுதியில் உள்ள ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து நெருப்பு குழம்பை உமிழ்ந்துவருகிறது. ஐஸ்லாந்தில் கடந்த சில வாரங்களாக 40 முறை சிறியளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையெடுத்து இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துவருகிறார்கள்.

வழிந்தோடிவரும் நெருப்பு குழம்பில் எரிமலை விஞ்ஞானிகள் சிலர் ‘ஹாட் டாக்’ சமைத்து சாப்பிட்டுள்ளனர். 900 ஆண்டுகள் கழித்து வெடித்துள்ள இந்த எரிமலை நெருப்பு குழம்பில் உணவு சமைத்து சாப்பிடுவதினால் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற விழிப்புணர்வு விஞ்ஞானிகள் ஏற்படுத்தி உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.