”குவாட்டர்” வாங்கினால் இட்லி, கறி குழம்பு இலவசம்..! மதுபான கடையில் அத்துமீறல்

அரசின் உத்தரவை மீறி சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்வது மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு குவாட்டர் வாங்கினால், இட்லி, கறி குழம்பு இலவசம் என்ற அறிவிப்பால் விற்பனை கல்லா கட்டியது. நாமக்கல் மாவட்டம்…

அரசின் உத்தரவை மீறி சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்வது மட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு குவாட்டர் வாங்கினால், இட்லி, கறி குழம்பு இலவசம் என்ற அறிவிப்பால் விற்பனை கல்லா கட்டியது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆர்.புதுப்பாளையம் பகுதியில் அரசித்ன் உத்தரவை மீறி சட்டவிரோதமாக காலை 6:00 மணி முதல் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இருந்து அப்பகுதியில் மதுபான விற்பனையை அதிகரிக்கவும், மதுப்பிரியர்களை கவரும் வகையிலும், ஒரு குவாட்டர் வாங்கினால் இட்லி, கறியுடன் குழம்பு இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பு காரணமாக காலை முதலே அந்த மதுக்கடையில், ஏராளமானோர் குவியத் தொடங்கினர். இதனால் மது விற்பனை வழக்கத்தை விட நன்றாகவே கல்லா கட்டியது. மேலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் இதுபோல் இலவசம் அறிவித்து மது விற்பனை செய்யப்படுவது அப்பகுதி மக்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக காவல்துறையினர் தலையிட்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.