பிரஷாந்த் கிஷோர் பீகாரிகளுக்கு உண்மையாக இருக்க நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அரசு துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தொகை மீது
ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்,
போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும்
ஓய்வூதியத்தின் மீதான அகவிலைப்படி உயர்வு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம்
முதல் காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டித்து, அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் டிஏ(DA) ஓய்வூதிய மீட்பு குழு என்ற அமைப்பின் மூலம் போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க கோரி கோட்டைய நோக்கி முற்றுகை போராட்டம் சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடந்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக முழுவதும் இருந்து ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட
ஓய்வூதியதார்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மேடையில் தெரிவித்ததாவது..
” தொலைவிலிருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை
தொட்டதுக்கெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள் என்று கடந்து செல்வார்கள். இழந்து விட்ட உரிமைகளை பிச்சை கேட்டு பெறமுடியாது போராடித்தான் பெற வேண்டும். அகவிலைப்படி உயர்வை கேட்டு இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாக போராடுகிறார்கள். 2015 வரை தந்து கொண்டிருந்த அகவிலைப்படி தான் 2015 நவம்பர் மாதத்தின் முதல் நிறுத்தி விட்டார்கள் அதில் இருந்தால் இந்த போராட்டம் தொடங்கியது.
ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தீர்த்து தருவேன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரச்சினைகளை நிர்வாகத்திற்கு எடுத்துச் சொல்லாதவர்கள் எதற்காக அரசாங்க பதவிக்கு தர வேண்டும் இதே போராட்டத்தை டாஸ்மார்க் ஊழியர்கள் செய்தால் உடனடியாக கவனத்தில் எடுத்து தீர்த்து வைத்து இருப்பார்கள்
அகவிலைப்படி கொடுக்க காசு இல்லை. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு
ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் கொடுக்க ₹350 கோடி எங்கிருந்து வந்தது. பிற துறையினருக்கு அகவிலைப்படி கொடுக்கும் போது, போக்குவரத்து ஊழியர்களுக்கு
ஏன் கொடுக்க முடியவில்லை. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்க செயல்படுத்த வேண்டும்.
இதனையும் படியுங்கள்: திமுக எம்.பி திருச்சி சிவா வீடு மீது திடீர் தாக்குதல் – திருச்சியில் பரபரப்பு
இவர்களுக்கான ஓய்வூதியத்தை அந்த அகவிலை வியர்வை அகவிலைப்படி உயர்வை அரசு கருவூலத்தின் மூலமாக அவர்களுக்கு வழங்க வேண்டும். ஓய்வு பெறுபவர்களுக்கு வழங்ங்கக்கூடிய ஓய்வூதிய பணம் அரசாங்கத்திடம் இல்லை அந்த பணமெல்லாம் அரசை நடத்துவர்களிடம் உள்ளது. எனவே அரசு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சனைக்கு முதல்வர் உடனடியாக தீர்வு காண வேண்டு்ம் ” என சீமான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்ததாவது..
ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தமில்லாமல் வழங்க
வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடுகிறார்கள் இது நியாயமான கோரிக்கை
மேலும் வட இந்தியர்கள் தான் தமிழக இளைஞர்களை தாக்குகிறார்கள். திருப்பூரில்
கட்டையை தூக்கிக்கொண்டு தமிழர்களை அடித்தது யார்?
பிரஷாந்த் கிஷோர் பீகார் முதலமைச்சருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று
நினைத்தால் நான் என் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்,
அதனால் வழக்குபதிவு குறித்து நான் கவலைப்படுவதில்லை அதை பொருட்படுத்தவும்
இல்லை என்றார்.
தொடர்ந்து பேசியவர் வட மாநிலத்தவர்கள், தமிழகத்திற்குள் வரும் பொழுது அவர்களுக்கான அடையாளங்களை ஒப்படைக்க வேண்டும் என்று தான் நான் கேட்கிறேன். தானியங்கி பண இயந்திரங்களை திருடி சென்றவர்களை ஹரியானாவில் சென்று கண்டுபிடித்தனர். மீதி இருவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை காரணம் இவர்களிடம் தரவுகள் இல்லை.
வட இந்தியர்கள் தமிழகம் வந்த பிறகு குற்ற செயல்களின் எண்ணிக்கை கூடி
இருக்கிறதா இல்லையா? அதேபோன்று போதைப் பொருள்கள் விற்பனையும் கூடியுள்ளது இது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவையெல்லாம் நான் போதிக்கும் போது யாருக்கும் புரியாது பாதிக்கும் போது அனைவருக்கும் புரியும். அப்போது நான் சொன்னது சரி என்பீர்கள் அதுவரையில் நான் பொறுமையாக தான் இருப்பேன் என்றார்.
– யாழன்







