மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முனைப்பில் வனத்துறையினர் தீவரம் காட்டி வருகின்றனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதி பத்தாயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட மிக நீண்ட வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் சிறுத்தை, புலி, காட்டு யானை, காட்டு மாடு, செந்நாய், கரடி என ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. தற்போது அப்பகுதியில் வறட்சி துவங்கியுள்ளது. இதனால் வனத்தில் உள்ள மரங்கள், செடிகள், கொடிகள் காய்ந்து வருகின்றன.
எனவே உயிரினங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறைக்காக வெளியேறும் நிலை எற்படுகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜக்கனாரி, கன்டியூர் போன்ற வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. எனவே அவற்றிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தற்போது வனத்துறையினர் செயற்கை தண்ணீர் தொட்டிகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனத்தில் 7 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் புதிதாக அமைத்தும் வருகின்றனர். குறிப்பாக ஜக்கனாரி காப்பு காட்டில் 13 லட்சம் செலவில் போர்வெல் அமைத்து சோலார் மூலம் இயங்கம் மோட்டார்களை பொறுத்தி தண்ணீர் நிரப்பும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
—-அனகா காளமேகன்







