முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் மட்டும் நிற்கவில்லையெனில்?.. மக்களவையில் எம்பி ஆவேசம்

சென்னை-கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நிற்கவில்லை என்றால் செப்டம்பர் 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் முதல் கேரள மாநிலம் கொல்லம் வரை விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி,மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை வழியாக கொல்லம் சென்றடைகிறது. கடந்த 2016ம் ஆண்டு தொடக்கம் வரை இந்த ரயிலானது சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று சென்றது. அதன் பின்னர் சிவகாசி ரயில் நிலையத்தில் இப்போது வரை அந்த விரைவு ரயில் நிறுத்துவது இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக இன்றைய தினம் மக்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் தொழில் நகரமான சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை உள்ளடக்கி உள்ளது.

 

இந்நிலையில் சென்னை-கொல்லம் ரயில் 2016ம் ஆண்டு முதல் சிவகாசியில் நிற்காமல் சென்று வருகிறது. எனவே தொழில் நகரமான சிவகாசியில் சென்னை-கொல்லம் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2021 செப்டம்பர் 21ம் தேதி அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து மனு அளித்ததாகவும், அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் 2022 ஏப்ரல் மாதம் இப்போதைய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து மனு அளித்ததாகவும், ஆனால் அந்த மனு மீது எந்த பதிலும் வராத நிலையில் தற்போது மக்களவையில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தன்னுடைய கோரிக்கையை முன் வைப்பதாகவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் முதல் கொல்லம் வரை இயக்கப்படும் ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்லவில்லை என்றால் செப்டம்பர் 22ம் தேதி என்னுடைய தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு சிவகாசி வஞ்சிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனாவால் உயிரிழந்த (BPL) குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம்: கர்நாடக அரசு

தமிழ்நாடும், மாவட்டங்கள் பிரிந்த வரலாறும்!

G SaravanaKumar

ஊரடங்கில் ஊர் சுற்றிய இளைஞர்கள்; ட்ரோன் மூலம் கண்காணித்த போலீஸார்!

G SaravanaKumar