“ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால், ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” – ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு

“ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால்,  ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.  மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி சார்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போட்டி…

“ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால்,  ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி சார்பில்,
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கம் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்தில் முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவர்களை ஊக்குவித்தார்.  பின்னர் மேடையில் பேசிய அவர்,  “நான் ஐபிஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால்,  ஆட்டோ ஓட்டுநராக தான் ஆகிருப்பேன்” என உருக்கமாக பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.