குட் நியூஸ் சொல்லப் போகும் ரன்வீர் – தீபிகா ஜோடி…வெளியான புதிய தகவல்!

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.  பாலிவுட்டில் முன்னணியில் இருப்பவர்கள் ரன்வீர் சிங்,  தீபிகா படுகோனே தம்பதி.  6 ஆண்டுகளாக டேட்டிங் செய்த இவர்கள் கடந்த 2018…

பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. 

பாலிவுட்டில் முன்னணியில் இருப்பவர்கள் ரன்வீர் சிங்,  தீபிகா படுகோனே தம்பதி.  6 ஆண்டுகளாக டேட்டிங் செய்த இவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இருவரும் இணைந்து, பாஜ்ராவ் மஸ்தானி, பத்மாவத், 83 உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினர்.  இருவருக்கும் விவாகரத்து என்றும் சில வதந்திகளும் பரவின.  ஆனால், அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி கடந்த நவம்பர் மாதம் இவர்கள் தங்களது 5-வது திருமண நாளை கொண்டாடினர்.

இந்நிலையில்,  தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.  நேற்று  77வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் விழாவின் தொகுப்பாளராக தீபிகா படுகோனே கலந்து கொண்டார்.  லண்டனில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கண்ணை கவரும் அழகான சேலையை அணிந்திருந்தார்.  அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்து சேலை அணிந்திருந்துததை வைத்து அவர் கர்ப்பாக இருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.  ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் அவர் தனது இரண்டாவது அல்லது மூன்றாவது மாதங்களில் இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.  கடந்த ஜனவரி மாதம் வோக் சிங்கப்பூரில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு தீபிகா படுகோன் அளித்த பதில் தற்போது வைரலாகி வருகிறது . நீங்கள் தாயாக மாறுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறீர்களா? என  கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  இந்த கேள்விக்கு, நிச்சயமாக.  நானும் ரன்வீரும் குழந்தைகளை நேசிப்பவர்கள்.  எங்கள் குழந்தைகளுடனான குடும்பத்தை தொடங்கும் நாளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.