முக்கியச் செய்திகள் தமிழகம்

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: நீட் தேர்வுக்கு எதிராக மசோதா

மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

கொரோனா காரணமாக, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில்
தற்காலிக சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 13 ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது.

கடந்த 9 ஆம் தேதி போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறைகள் மீதான விவாதம் நடந்தது. இதையடுத்து, விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. போலீஸ் மற்றும்
தீயணைப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்குகிறார்.

போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் வகையிலான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையடுத்து ஒரு மாதமாக நடந்த சட்டப்பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Advertisement:
SHARE

Related posts

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்: குவியும் பாராட்டுக்கள்!

எல்.ரேணுகாதேவி

கொரோனாவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு குழு

Saravana Kumar

ஒலிம்பிக் செல்லும் டூட்டி சந்த்