திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும், என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி திறந்த வேனில், சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் தரும் திட்டங்கள் தயாராகி வருவதாக கூறினார். மேலும், அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் பள்ளிக்கல்வி முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பெரியநாயக்கன் பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிசம் தலைதூக்கிவிடும், என விமர்சித்தார். மேலும், கச்சத்தீவு யாருடைய ஆட்சியில், இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது?, ஹைட்ரோ ஹார்பன் திட்டம் மற்றும் நீட் தேர்வு ஆகியவை, யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது, என அடுக்கடுக்காக அவர் கேள்வி எழுப்பினார். அதிமுகவின் சாதனைகளை துண்டுச் சீட்டு இல்லாமல், விவாதிக்க தான் தயார் என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதேபோல் ஸ்டாலின் தயாரா எனவும் சவால் விடுத்தார்.