234 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” எனும் பெயரில், 234 தொகுதிகளிலும் 30 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, ஒரே நாளில் 6 முதல் 8 தொகுதிகளில், தலா 2 பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29ஆம் தேதி திருவண்ணாமலை அருணை கல்லூரி மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்தக்கட்ட தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்களிடமிருந்து கோரிக்கைகளை பெறும் வகையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில், புகார் பெட்டி வைக்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக வரும் 31ம் தேதி, திருவள்ளூரில் சுமார் 25 ஆயிரம் பெண்களை திரட்டி, பொதுக்கூட்டம் நடத்தி, அவர்களிடமிருந்து புகார்களை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.