ஜெயலலிதா, கருணாநிதி என்ற இருபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தல், அனைவருக்கும் புதுத் தேர்தல் தான், என்பதால் சவால் மிகுந்ததாக இருக்கும் என்று, பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவெடுத்த பின், தேமுதிக தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இருபெரும் தலைவர்கள் இல்லாமல், வருகின்ற தேர்தல் எல்லாக் கட்சிகளுக்கும் புதுத் தேர்தல் தான் என்றும், அனைவருக்கும் மிகப் பெரிய சவால்கள் காத்திருக்கின்றன, என்றும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஏற்கனவே தேமுதிக தனியாகத் தேர்தல் களம் கண்டிருப்பதாகவும், கட்சி ஆரம்பித்து 16 வருடங்கள் ஆகும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் பெரிய விஷயமில்லை என்றும், பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.