திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்தாகிவிடும் – அமைச்சர் சரோஜா

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, பூசாரிபாளையம், ஜே.ஜே காலனி மற்றும் உள்ளிட்ட…

திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட காக்காவேரி, பூசாரிபாளையம், ஜே.ஜே காலனி மற்றும் உள்ளிட்ட பகுதிகளில் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள் என்றும், மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்தால் மட்டுமே வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.