முக்கியச் செய்திகள் தமிழகம்

75வது சுதந்திர தினம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னையின் அடையாளங்கள்

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி சென்னையின் அடையாளமாக விளங்கும் கட்டடங்கள் தேசியக் கொடியின் மூவர்ணத்தால் ஆன விளக்குகளால் ஜொலிக்கின்றன.

இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை காலை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின அணி வகுப்புகளை பார்வையிடுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

75 ஆம் ஆண்டு சுதந்திர தினம் என்பதால், இதனை கொண்டாடும் வகையில், நாடு முழுவதிலும் அனைவரது இல்லங்கள் மற்றும் வணிக வளாகங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு சிறப்பிக்க படவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி மக்கள் தங்கள் தேசப் பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சென்னையில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் சுதந்திர தினவிழா நடைபெற உள்ள புனித ஜார்ஜ் கோட்டை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை, சென்னை புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் மத்திய ரயில் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம், எல் ஐ சி கட்டிடம் உள்ளிட்ட பகுதிகள், மூவர்ண கொடி போர்தியது போல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டும் இன்றி சென்னையில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளும் மூவர்ண கொடி போர்த்தியது போல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச பக்தியை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் செய்யப்பட்டிருந்த மூவர்ண அலங்காரங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜப்பானில் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை!

Niruban Chakkaaravarthi

விவசாயிகளை அழைத்துப் பேசி போராட்டத்திற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Saravana

ஜப்பான் பிரதமருக்கு கொரோனா; விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி ட்வீட்

G SaravanaKumar