முக்கியச் செய்திகள் இந்தியா

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வென்றால் 300 யூனிட் இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

சண்டிகர் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
“300 யூனிட் இலவசர மின்சாரத் திட்டத்தை பஞ்சாப்ப்பில் செயல்படுத்தினால், 80 சதவீத மக்கள் மின்கட்டணம் செலுத்த தேவையிருக்காது. இந்த முறை ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் சிறப்பான களப்பணியாற்றியிருக்கிறது.
பஞ்சாப்பின் மின் கட்டணம் கடுமையாக உயர்ந்திருக்கிறது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

வருமானத்தில் 50 சதவீதத்தை மின் கட்டணத்துக்கு செலுத்துவதாக பஞ்சாப் மாநில மக்கள் சொல்கின்றனர். இரண்டு மின் விளக்குகள், ஒரு மின் விசிறி பயன்படுத்தும் ஒரு குடும்பத்துக்கு ரூ.50,000 மின் கட்டணம் செலுத்தக் கோரி பில் வந்துள்ளது. இப்படி இவ்வளவு அதிக தொகை செலுத்த முடியும்.டெல்லியில் நாங்கள் மின்சாரம் உற்பத்தி செய்வதில்லை. வெளிமாநிலங்களில் இருந்துதான் கொள்முதல் செய்கின்றோம். ஆனால், நாட்டிலேயே டெல்லியில்தான் மின்கட்டணம் குறைவாக இருக்கிறது. இதே நடைமுறையை நாங்கள் பஞ்சாப்பில் பின்பற்றுவோம்.”

இவ்வாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

9 மாதமாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் மின் தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Halley karthi

அரைஞாண் கயிறுக்காக சிறுவன் நீரில் மூழ்கடிப்பு!

Jayapriya

உலகிலேயே சிறிய ஆச்சரிய ’ராணி’: கொரோனாவிலும் செல்பி எடுக்கக் குவியும் மக்கள்

Halley karthi