முக்கியச் செய்திகள் இந்தியா

வருகிறது புதிய கொரோனா தடுப்பூசி

அமெரிக்கா தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவை பொறுத்தவரை கோவாக்சின் தடுப்பூசி, கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயனடுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் கொரொனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். மேலும், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

Ezhilarasan

பக்ரீத் பண்டிகை தளர்வுகளை ரத்து செய்யுங்கள்: கேரளாவுக்கு மருத்துவர் சங்கம் கோரிக்கை

Saravana Kumar

குஷ்புவுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமித்ஷா!

Halley karthi