ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவி – எடப்பாடி பழனிசாமி!

ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

“ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர் உயிரிழந்தால் அவரின் குடும்பத்திற்கு அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு அரசு செலவில் இன்சூரன்ஸ் செய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.