செய்திகள்

பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை உடனடியாக அகற்ற வேண்டும்; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

பொது இடங்களில், அனுமதி இல்லாமல் உள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்றவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பொது இடங்கள் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் உள்ள சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்றவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அரசியல் மற்றும் மதம் சார்ந்தவையாக இருந்தாலும், ஒரே மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என ஆணையிட்டனர். மேலும், அனுமதியற்ற சிலைகள் மற்றும் கட்டுமானங்களை அகற்றியது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை அரசு தரப்பு அறிக்கையாக அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மறைந்த எழுத்தாளர் கி.ரா.விற்கு கோவில்பட்டியில் சிலை: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Halley Karthik

ஏலம் விடப்பட்ட தந்தையின் வாகனத்தை மீட்ட பெண்

G SaravanaKumar

கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அதிரடி

Halley Karthik

Leave a Reply