முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை: நடிகை ரோஜா குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என சட்டமன்ற உறுப்பினரும் நடிகையுமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநில சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் சென்றாலும் உரிய மரியாதை அளிக்கப்படுவது கிடையாது எனக் குற்றம் சாட்டினார். குறிப்பாக தனது பதவிக்குக் கூட உரிய மரியாதை தராமல் தேவஸ்தான அதிகாரிகள் புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர சட்டமன்ற உரிமை குழு தலைவர் கோவர்தன் ரெட்டி, ரோஜாவின் முறையீடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலில் குடியரசு தலைவர் தேர்தல் ; அடுத்து மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் ?

Web Editor

கால்பந்து ஜாம்பவான் மரடோனா சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

G SaravanaKumar

பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்

G SaravanaKumar

Leave a Reply