ICC செப்டம்பர் மாத விருது – சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்ற இந்திய அணி..!

ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான விருதை இந்திய வீரர்கள் வென்று அசத்தியுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின்  அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் ஷர்மா  7 போட்டிகளில் விளையாடி 314 ரன்கள் குவித்தார்.  இதில் மூன்று 3 அரைசதங்களும் அடக்கம். இதனை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அபிஷேக் ஷர்மா ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதே போல், ஐசிசியின் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்திய மகளீர் அணியின் துணை கேப்டனான ஸ்மிருதி மந்தனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.