ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் – முதலிடம் பிடித்த ஆப்கானிஸ்தான் வீரர்!

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.  5 ஆண்டுகளுக்கு மேலாக ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர்…

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.  5 ஆண்டுகளுக்கு மேலாக ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடம் பிடித்து வந்தவர் வங்கதேச வீரர் ஷகிப் ஹல் ஹாசன்.

இந்தநிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, ஷகிப் ஹல் ஹாசனை பின்னுக்கு தள்ளி ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த லால் பகதூர் சாஸ்திரியின் பேரன்….

மேலும் இவர் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.  மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.