ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்…!

தமிழ்நாட்டில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் நாடு தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள உத்தரவில்,

  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் செயலாளராக இருந்த சஜன்சிங் ஆர். சவான், லேக்பவனில் ஆளுநரின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை மாவட்ட முன்னாள் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, யர் கல்வித்துறையின் அரசு சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அறிவியல் நகரத்தின் முதன்மை செயலாளர் / துணை தலைவராக இருந்த ஹர் சகாய் மீனா, நிலபுனரமைப்பு முதன்மை செயலாளர்/ ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ். பால் உற்பத்தி மற்றும் பல் வளத்துறையின் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவர் ஆவின் நிர்வாக இயக்குநராகவும் செயல்பட உள்ளார்.
  • தமிழ்நாடு வார்ஹவுசிங் காப்பரேஷனின் நிர்வாக இயக்குநர் விஜயராணி, தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையின் இயக்குநராக செயல்பட உள்ளார்.
  • தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறையின் இயக்குநராக இருந்த குமாரவேல் பாண்டியன், மாநில திட்டமிடல் கமிஷனின் உறுப்பு செயலாளராக செயல்பட உள்ளார்.
  • திருநெல்வேலி கலெக்டராக இருந்த சுகுமார், ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் பிரிவின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
  • திண்டுக்கல் கலெக்டராக இருந்த சரவணன், சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையராக (பணிகள்) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை பெருநகர மாநகராட்சியின் வருவாய் மற்றும் நிதித்துறிையன் துணை ஆணையராக இருந்த பிரதிவிராஜ். கரூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ‘எல்காட்’ இயக்குநராக இருந்த தீபனவிஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
  • கடலூர் மாவட்டம் சிதம்பரம் டிவிஷனின் சப் – கலெக்டராக இருந்த கிசான் குமார். கடூர் மாநகராட்சியின் ஆணையராக செயல்படுவார்.
  • கரூர் மாவட்டம் குளித்தலை டிவிஷன் சப் கலெக்டர் ஸ்வாதி ஸ்ரீ திருச்சி மாவட்டம் கிராம மேம்பாட்டு ஏஜென்சி கூடுதல் கலெக்டராக (டெவலப்மென்ட்/திட்ட அதிகாரி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • காஞ்சிபுரம் டிவிஷன் சப் கலெக்டர் ஆசிக் அலி, காஞ்சிபுரம் மாவட்டம் கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் டிவிஷன் சப் கலெக்டர் விஜய் குமார் மீனா, திருநெல்வேலி மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலார் டிவிஷன் சப் கலெக்டர் அனந்த் குமார் விழுப்புரம் மாவட்டம் கூடுதல் கலெக்டராக செயல்பட உள்ளார்.
  • ஈரோடு மாவட்டம் கோபி டிவிஷன் சப் கலெக்டர் சிவானந்தம் சேலம் வட்டம் கூடுதல் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் டிவிஷன் சப் கலெக்டர் சங்கீதா, உதகமண்டலம் ஸ்பெஷல் சிறப்பு ஏரியா மேம்பாட்டு திட்டத்தின் (உதகமண்டலம்) திட்ட இயக்குநராக செயல்பட உள்ளார்.
  • சிவகங்கை மாவட்டம் தேகவ்கோட்டை டிவிஷன் சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், சிவங்கை மாவட்டம் கூடுதல் கலெக்டராக செயல்பட உள்ளார்.
  • தேனி மாவட்டம் பெரியக்குளம் டிவிஷன் சப் கலெக்டர் ரஜத் பீட்டன். தேனி மாவட்ட கூடுதல் கலெக்டராக (மேம்பாடு)/திட்ட அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.