விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கட்டா குஸ்தி’. செல்லா அய்யாவு இயக்கி இருந்த இப்படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, ஸ்ரீஜா ரவி, கஜராஜ், நிகிலா சங்கர், ஹரீஷ் பேரடி, அஜய் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
மேலும் இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார. ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து இப்படம் வெற்றி பெற்றது.
இயக்குனர் செல்லா அய்யாவு – நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் தற்போது இப்படத்தின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன், யோகி பாபு. கருணாகரன், நடிகை மோக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ ராஜேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
இப்படம் வரும் ஜூலை 3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் டீசர் வெளியானது.







