நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70 ஆயிரமாகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
3 ஆயிரத்து 921 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 305 பேராக உள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 25 கோடியே 48 லட்சத்து 49 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதைய கொரோனா நோய்த்தொற்று விகிதம்: 4.71%, குணமடைதல் விகிதம்: 95.26% மற்றும் இறப்பு விகிதம்: 1.26% உள்ளது” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.