”இந்த ஆண்டு உங்களுக்கு நிறைய இசையை கொடுப்பேன் என உறுதியளிக்கிறேன்” ரசிகர்களிடம் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் 1997ம் அண்டு ‘அரவிந்தன்’ திரைப்படம் மூலம் யுவன் சங்கர் ராஜா தனது இசை பயணத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 16. இதனைத் தொடர்ந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘தீனா’, ‘மனதை திருடிவிட்டாய்’, ‘நந்தா’, ‘துள்ளுவதோ இளமை’ என அடுத்தடுத்த படங்கள் மூலமாக தனி கவனம் பெற்றார் யுவன்.
அதன்பிறகு வெளிவந்த ‘காதல் கொண்டேன்’, 7ஜி ரெயின்போ காலனி, ‘புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் தனது இசையால் முத்திரை பதித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தார். சமீபத்தில் அவரது இசையில், ‘லவ் டுடே’, ‘லத்தி’ படங்கள் வெளியாகி பாடல்கள் ஹிட் அடித்தன. தொடர்ந்து ‘ஏழு கடல், ஏழு மலை’, ‘இறைவன் மிகப்பெரியவன்’, ‘இறைவன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அண்மைச் செய்தி : ”எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது” – இயக்குநர் மிஷ்கின் குறித்து லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 26 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மெசேஜ்கள், வீடியோ எடிட்கள், கோலாஜ் என என்னை வாழ்த்தி பதிவிட்ட உங்களின் எல்லையில்லா அன்புக்கு நன்றிகள். உங்களது இந்த அன்புக்கு மரியாதையுள்ளவனாக இந்த வருடத்தில் நிறைய இசையை நிச்சயம் கொடுப்பேன் என உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.







