சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் – திருமாவளவன் பேட்டி!

‘என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்’  என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது: சிதம்பரம்…

‘என்னுடைய சொந்த தொகுதியான சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன்’  என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

சிதம்பரம் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி.  இங்கு தான் போட்டியிடுகின்றேன். இந்தத் தொகுதியில் தான் போட்டியிட முடியும்.  இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.  கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும்,  ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும், கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘இந்தியா’ கூட்டணியில் போட்டியிடுகிறது.  திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.